Loading...
「ツール」は右上に移動しました。
0いいね 145回再生

Kumbakonam News Apr 2024 ADMK Ex Minister O S Maniyan Byte on 11 04 2024

கும்பகோணத்தில் மேனாள் தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் பரபரப்பு பேட்டி ……

திமுக, திமுக கூட்டணி மற்றும் மு க ஸ்டாலின் ஆகியோரை வாக்குகள் விரட்டியடியுங்கள் என வாக்காளர்களே என்று சொல்லாமல் சொல்வது போல, இன்றைய தினமணி நாளிதழில், கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு மு க ஸ்டாலின் தந்துள்ள மோசடியான, மக்களை ஏமாற்றும் விளம்பரம் குறித்து விளக்கமளித்து மேனாள் தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கும்பகோணம் அதிமுக மாநகர அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த போது,

இன்றைய தினமணி நாளிதழில், திமுக சார்பில் 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஒரு விளம்பரம் அளித்து, அதில் விலை உயர்விற்கு காரணமானவர்களை வாக்குகளால் விரட்டியடியுங்கள் வாக்காளர்கள் என குறிப்பிட்டுள்ளார் அதில் 2014ல் பெட்ரோல் விலை லிட்டர் ரூ 66.37 என்றும் தற்போது 2024ல் ரூ. 100.75 என்றும், அதுபோல 2014ல் டீசல் விலை லிட்டர் ரூ 53.38 ஆக இருந்தது தற்போது 2024ல் ரூ 92.44 ஆக உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

இதில் உண்மை நிலவரம் என்வென்றால், இன்றைய பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டர் ரூ 57.30 மத்திய அரசு வரி ரூ 19.90 தமிழக அரசின் வரி ரூ 21.56 டீலர் கமிஷன் ரூ 3.48 ஆக மொத்தம் விலை ரூ 102.24 ஆகும். அதுபோலவே இன்றைக்கு டீசலின் அடிப்படை விலை லிட்டர் ரூ 58.06 மத்திய அரசின் வரி ரூ 15.80 தமிழக அரசின் வரி ரூ 17.74 டீலர் கமிஷன் ரூ 2.24 ஆக மொத்தம் விலை ரூ 93.84 ஆகும் இதன்படி பார்த்தால் பெட்ரோலில் தமிழக அரசு, மத்திய அரசை காட்டிலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.66 கூடுதலாகவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.94 கூடுதலாக தமிழக மக்களிடமிருந்து வரி வசூலிக்கிறது எனவே விலை உயர்விற்கு ஆளும் திமுக தலைமையிலான தமிழக அரசை காரணம்

எனவே மு க ஸ்டாலின் கூற்றுப்படி, திமுகவையும், திமுக கூட்டணியையும், மு க ஸ்டாலினையும் தான் தமிழக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும் என்றார் எனவே இந்த விளம்பரம் ஒரு பச்சை மோசடியான விளம்பரம், மக்களை ஏமாற்றும் விளம்பரம் என்றும் சாடிய ஓ எஸ் மணியன், தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த போது,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை, அம்மா எதிர்த்த நீட்டிற்கு, எடப்பாடியார் ஆதரவாக செய்யப்பட்டார் என குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் காங்கிரஸ் கட்சியின் திடீர் தலைவர், எனவே அவர் குபீர் என தான் பதிலளிப்பார் என்றும் கிண்டலடித்ததுடன், நீட் தேர்வை அம்மா அவர்கள் அமல்படுத்திட மாணவர்களையும், ஆசிரியர்களையும் தயார் செய்ய ஒர் ஆண்டு காலம் அவகாசம் தான் கோரினார் என்றும், தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்றும், பாஜக அதிமுக கள்ள உறவு என்ற கேள்விக்கு பதிலளித்த போது, கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார், பொதுக்குழு நிர்வாகிகளின் ஏகமனதான முடிவின்படியே, பாஜகவோடு இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதோடு, ஒரு போதும் இல்லை என்றும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் அறிவித்தார் என்றும், அந்த கருத்தில் எப்போதும் கடுகளவும் அணுவளவும் மாற்றம் இல்லை என்பதனையும் தெளிவுபடுத்திய ஓ எஸ் மணியன்,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் என்ன அவ்வளவு பெரிய மந்திரவாதியா ? என பதில் கேள்வி எழுப்பி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் ஓ எஸ் மணியன்

இப்பேட்டியின் போது அவருடன், மயிலாடுதுறை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவின் தந்தையும், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ், தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே பாரதிமோகன், கும்பகோணம் மாநகர செயலாளர் இராம இராமநாதன், கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது