🦚கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
🦚சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே
🦚ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம் குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
🦚தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தந்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
🦚அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறல் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமாதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முக சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
🦚காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்த குருநாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
🦚ஆறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
🦚அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கொலம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்
🦚அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
🦚திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞான அருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்
#முருகன்பாடல்கள் #முருகன்வழிபாடு #பக்திபாடல் #வெற்றிவேல்வீரவேல் #அரோகரா #தமிழ்க்கடவுள் #கந்தசஷ்டிவிரதம் #முருகன் #வேலன் #பக்திபாடல்தமிழ் #பழனிமுருகன் #பழமுதிர்ச்சோலை #திருத்தணி #திருச்செந்தூர்முருகன் #திருப்பரங்குன்றம் #சுவாமிமலை #முருகன் #வைகாசிவிசாகம் #தைப்பூசம் #கிருத்திகை #கந்தன் #உத்திரம் #devotionalsong #music #subscriber #trendingsong #lordmurugan #murugan #status #murugansongs #velan #lordmuruganstatus #bakthi #musicsong #paadalvarigal #godmurugansongs #lordmuruganwhatsappstatus_tamil #statue #muruganstatue #bakthipaadal #bakthistatus #trendingsong #muruganvideo #arupadaiveedumsong #kovaikamalasongs #muruganthunai #shortsvideo #shortsviral #shortvideo #shorts #short #shortvideos #shots #youtuber #youtubeshorts #youtube #youtubeshort #youtubevideo #youtubechannel #youtubers #youtubevideos #youtubeindia #skanda #kandhasasti #kavasam #tamil #tamilgodsongs #tamilsong #godmurugansongs