#astrology #gurupeyarchi #tamil #12rasipalan #dhanusutoday
குரு வக்ர நிவர்த்தி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே... கவலையை விடுங்கள்
தேவகுரு எனப்படும் குரு பகவான், ரிஷப ராசியில் பிப்ரவரி 4-ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலன் அடைவார்கள்.
ஜோதிடத்தில், பெயர்ச்சிகளை போலவே, வக்ர நிலையில், வக்ர நிவர்த்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 09 அக்டோபர் 2024 அன்று வக்ர நிலையை அடைந்த குரு பகவான், 04 பிப்ரவரி 2025 அன்று பிற்பகல் 03:09 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை குறைவில்லாமல் பெறுவார்கள்.