ஐப்பசி கடை முழுக்கை முன்னிட்டு இன்று நண்பகல், கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் பழைய பாலக்கரையின் காவிரியாற்றின் பகவத் படித்துறைக்கு எழுந்தருள, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சிவாச்சாரியார், அஸ்திரதேவருடன் மும்முறை காவிரியில் முங்கி எழ. ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி சிற்பாக நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது, இதில் ஏராளமானோர் பங்கேற்று காவிரியில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்