#ohparavaikaleparavaikale#puthiyathendral#spb
SP.Balasubramaniyam Tamil Sad song with lyrics
Movie : Puthiya Thendral
Year : 1993
இனிமையான பாடல்களை உங்களுக்கு தருவதில் நாங்கள்
பாடல் வரிகளில் ஏதும் பிழை இருப்பின் அதை தெரிவிக்கவும் நன்றி
ஆ: ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்
ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்
என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்
நான் ஒருகரையில் அவளோ மறுகரையில்
கிளிபோல் சிறகிருந்தும்
கிடந்தோம் இரு சிறையில்
வழிதான் கிடையாதா.. அடிவானம் முடியாதா..
பெ: ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்
என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள
பெ: புன்னகை ஓய்ந்து பூவும் காய்ந்து
இன்று நான் துடித்தேன்...
ஆ: கண்மணி எங்கே காணவில்லை
கண்ணில் நீர் வடித்தேன்..
பெ: நினைப்புதான் நெஞ்சில்
வந்து துடிக்குது கொஞ்சம்
ஆ: நினைப்பதை நிறுத்தினால்
தவித்திடும் நெஞ்சம்
பெ: தொட்டுப்பேச ஒரு கட்டுப்பாடு
ஆ: வெளியே சொன்னால் அடி வெட்கக்கேடு
பெ: அட அன்புக்கா தட்டுப்பாடு
ஆ: ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்..
பெ: என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்..
ஆ: காதலைப்போலே இன்பம் இல்லை
அன்று நாம் கண்டது..
பெ: காதலைப்போலே துன்பமும் இல்லை
இன்று நாம் காண்பது..
ஆ: உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே
பெ: ஒருதரம் அணைக்கனும் இறக்கனும் பின்னே
ஆ: காணல் நீரில் இரு தூண்டில் போட்டோம்..
பெ: இன்று கண்ணீர் ஆற்றில்
ஒரு தோட்டம் போட்டோம்..
ஆ: நாம் காலத்தின் கண்ணீரானோம்..
பெ: ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்
என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்
ஆ: நான் ஒருகரையில் அவளோ மறுகரையில்
கிளிபோல் சிறகிருந்தும்
கிடந்தோம் இரு சிறையில்
பெ: வழிதான் கிடையாதா. அடிவானம் முடியாதா.
ஆ: ஓ. பறவைகளே பறவைகளே நில்லுங்கள்
பெ: என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்