Loading...
「ツール」は右上に移動しました。
203いいね 1591回再生

#muruga #kanthakurukavasam #tamilgodsongs #tamilgodsongs #murugan_whatsapp_status #trending #shorts

🦚அனுகிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்மையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து

🦚பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய்
வேண்டியது உன் அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன் தான் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா

🦚அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு

🦚அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருந்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி அருள்

🦚சீக்கிரமே வருவாய் சிவானந்தம் வருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய்
சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா

🦚ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம்
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒளித்திட்டு

🦚கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும்

🦚மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே

🦚பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்துரக்ஷிப்பாய்
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினத்தருள் காக்கட்டும் புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்

🦚 கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும்செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்

🦚உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும்
கமுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்

🦚தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திக்கேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணளான் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடித்தான் காக்கட்டும்

🦚ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிக்குஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்

🦚புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர்உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்புமேதசையும்
அறுமுருகா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்

🦚என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர்
பாபத்தைத் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புரவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் என்றும்

🦚க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஓன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

🦚முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்பலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே ஏத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா

🦚ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா

🦚சொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடா

🦚அக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ

🦚கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே

🦚வேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்

#முருகன்பாடல்கள் #முருகன்வழிபாடு #பக்திபாடல் #வெற்றிவேல்வீரவேல் #அரோகரா #தமிழ்க்கடவுள் #கந்தசஷ்டிவிரதம் #முருகன் #வேலன் #பக்திபாடல்தமிழ் #பழனிமுருகன் #பழமுதிர்ச்சோலை #திருத்தணி #திருச்செந்தூர்முருகன் #திருப்பரங்குன்றம் #சுவாமிமலை #முருகன் #வைகாசிவிசாகம் #தைப்பூசம் #கிருத்திகை #கந்தன் #உத்திரம் #devotionalsong #music #subscriber #trendingsong #lordmurugan #murugan #status #murugansongs #velan #lordmuruganstatus #bakthi #musicsong #paadalvarigal #godmurugansongs #lordmuruganwhatsappstatus_tamil #statue #muruganstatue #bakthipaadal #bakthistatus #trendingsong #muruganvideo #arupadaiveedumsong #kovaikamalasongs #muruganthunai #shortsvideo #shortsviral #shortvideo #shorts #short #shortvideos #shots #youtuber #youtubeshorts #youtube #youtubeshort #youtubevideo #youtubechannel #youtubers #youtubevideos #youtubeindia #skanda #kandhasasti #kavasam #tamil #tamilgodsongs #tamilsong #godmurugansongs#muruga #kanthakurukavasam #tamilgodsongs #tamilgodsongs #murugan_whatsapp_status #trending