தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாதூ
வெந் தீவினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி
இராமானுசன் என்னும் சீர்முகிலே
பொருள்: ஊழ்வினைப் பயனால் தெளிவில்லாத பயனற்ற அறிவோடு உழன்று கொண்டிருந்த என்னை, கீர்த்தி மிக்க இராமானுசர் என்னும் காளமேகம் நொடிப்பொழுதில் மிகுந்த செவிச்செல்வம் உடையவனாக ஆக்கியது.