Loading...
「ツール」は右上に移動しました。
6いいね 256回再生

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை - இளம் கிளியே - மார்கழி மாத சிறப்பு பக்திபாடல்கள்.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர்.இதன் போது விடியும் முன்பே எழும் கன்னியர், பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட்கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது அவற்றைத் தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள்) சொல்லாதிருக்கையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந்நோன்பு நோற்கும் விதத்தை விளக்குகிறது.
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும்; பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும்; எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறி கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலின்போது பாடப்படுகின்றன.மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை - இளம் கிளியே - மார்கழி மாத சிறப்பு பக்திபாடல்கள்.

Subscribe To Our Geethanjali Tamil Devotional Songs Channel:‪@tamilbhakti‬

#Andalazhagar #Sriandalthiruppavai #Thiruppavai #bhaktisongs #superhitdevotionalsongs #ilankiliye