Loading...
「ツール」は右上に移動しました。
80いいね 1433回再生

# உன் கோயில் நாடி - உன் நாமம்சொல்ல சந்தோஷம் பிறக்குதய்யா @shirdi333 # 24.05.24

Music: Deepak Krishna. Singer: Sathesh Ragupathy
Lyrics- K.Sivakumar
இது ஒரு சாய் மஹிமா டிவி தயாரிப்பு

###################################

உன் கோயில் நாடி
உன் நாமம்
சொல்ல
சந்தோஷம் பிறக்குதய்யா

உன் கோலம் ஆளை இழுக்குதய்யா
தன்னாலே மேனி சிலிர்க்குதய்யா
என்னென்ன ஆனந்தம்.
என்னுள்ளே பேரின்பம்.

(உன் கோயில்)

முகத்தில் ஜொலிக்கும்
அழகைக் காண
அகத்தின் சோகம்
நீங்குதே
துதித்து முடித்து
வந்த பின்னும்.
துதிக்க உள்ளம் ஏங்குதே.

உந்தன் துணை வேண்டும் என
நித்தம்‌ கூட்டம் கூடுது
உந்தன் புகழ் பாட இங்கு
சோகம் தன்னால் ஓடுது.

ஷீரடி பூமி‌ புண்ணிய பூமி.

(உன் கோவில்)

குலைந்து கிடந்த ஷீரடி‌ ஊரைக்
கோயிலாக மாற்றினாய்.
கலங்கி தவித்த
ஏழை நெஞ்சில்
கருணை தீபம் ஏற்றினாய்.
நம்பி உனை நம்பி தொழ
நீயே எங்கள் நாயகன்.
எங்கள் துயர் நீக்கிட
இங்கே வந்த ஆண்டவன்.

அற்புதம் அற்புதம் உன்அருள் லீலைகள்.

(உன் கோயில்)


ஏழை பசிக்கு உணவைக் கொடுத்தல்
நீ மகிழும் சிந்தனை.
நாளும் உவந்து
ஊரே செய்தால்
தீரும் செய்த
தீவினை.

காலம் வருங்காலம்
நாளும் உன்னைத்
தேடிடும்
உந்தன் புகழ் சொல்லக் கேட்டு
உந்தன் அருளை
நாடிடும்.

இது தான் இது தான்
உன் அரும் மாட்சி.

(உன் கோவில்)

கோ. சிவகுமார்.

#saibabaaarathi #stavanamanjari #அற்புதங்கள் #சாய்பாபா #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #saibabasongs #மந்திரம்