Loading...
「ツール」は右上に移動しました。
84いいね 2465回再生

துவாரகமாயி உதி மருத்துவர் | Dwarakamai Udi Doctor | தீராத நோய்களையும் தீர்த்து வைப்பவர் நம் குரு

குருவின் வடிவில் சாய்நாதா மருத்துவர் நீயே குருநாதா
×××××××××××××××××××××××××××××××××××××××××
இசை டைரக்டர் அக்னி கணேஷ்

பாடல் - இரா.சாய் சரண்யா

பாடியவர் -

இது ஒரு சாய் மஹிமா டிவி தயாரிப்பு
×××××××××××××××××××××××××××××××××××××××××
ஓம் சாய் ராம்

பல்லவி

குருவின் வடிவே சாய் தேவா
மருத்துவர் நீயே குருநாதா

குருவின் வடிவே சாய் தேவா
மருத்துவர் நீயே குருநாதா

துவாரகா மாய்தனில் துனிதனை ஏற்றினாய்

அதில் வரும் உதியினை மருந்தாக மாற்றினாய்

துவாரகா மாய்தனில் துனிதனை ஏற்றினாய் அதில் வரும் உதியினை மருந்தாக மாற்றினாய்

குருவின் வடிவே சாய் தேவா
மருத்துவர் நீயே குருநாதா

குருவின் வடிவே சாய் தேவா
மருத்துவர் நீயே குருநாதா


சரணம்

உதியனும் மாமருந்தை தந்தாயே அந்நாளில்

பிணி எல்லாம் விலகிட கண்டாரே அந்நொடியில்

உதியனும் மாமருந்தை தந்தாயே அன்னாளில்

பிணி எல்லாம் விலகிட கண்டாரே அந்நொடியில்

என் பிணி யாதொன்று வந்தால் என்ன சாயி

உன் உதி பூசிக்கொள்ள விலகிடும் உண்மை சாயி

மருத்துவம் கைவிட்டு போனால் என்ன சாயி

என் விதி மாற்றிட உன் உதிப்போதும் சாயி

நம்பிக்கை நானும் கொண்டே சாயி

நாளும் நெற்றியில் இடுவேன் சாயி

விதியும் மதியும் நீயே சாயி

உதியை கொண்டு மாற்று சாயி

உதியின் மகிமையும் சாயிநாதா

உணர்ந்தேன் உன்னால் சீரடி நாதா


ஓம் சாய் ராம்
இரா.சாய் சரண்யா

#saibabasongs #அற்புதங்கள் #saibabaaarathi #stavanamanjari #சாய்பாபாவின்அற்புதங்கள் #ஸ்தவனமஞ்சரி #சாய்மந்திரம் #மந்திரம் #சாய்பாபா