Loading...
「ツール」は右上に移動しました。
165いいね 11197回再生

இளஞ்சோலை பூத்ததா | Ilancholai Pooththatha | S.P.Balasubramaniyam | Ilaiyaraja | உனக்காக வாழ்கிறேன்

#ilaiyaraja#spb#tamilmoviesong#ilancholaipooththatha

ilancholai Pooththatha : Unakaka Vaazhgiren -1986

Music Composed By : Ilaiayaraja

ஆஆ ஆ..ஆஆ ஆஆ..ஆ ஆ

ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று

காலம் தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதி தான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல
இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா


ஊமையாய் போன சங்கீதம் ஒன்று

இன்று தான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்
இன்று தான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதி தானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக்கோலம்