ஐயப்பன் (Ayyappan) அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் ஆகியோரின் மகனாகவும் அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாகவும் கருதப்படுகிறார். சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். ஐயப்பனின் வாகனம் எது என்று கேட்டால், புலி என்றுதான் சொல்வார்கள் பலரும். ஆனால், யானை, குதிரை, சிங்க வாகனங்களும் ஐயப்பனுக்கு உண்டு என்கின்றன புராணங்கள். முருகன், அய்யனார், இந்திரன் ஆகிய மூவருக்குமே யானை வாகனமாக இருக்கிறது. ஐயனாரே ஐயப்பனாக அவதரித்தவர் என்பதால் ஐயப்பனுக்கும் யானை வாகனமாகிறது.
சக்தி வாய்ந்த சபரிமலை ஐய்யப்பன் பாடல்கள் - கார்த்திகை மாதம் ஐயப்பன் பக்தி பாடல்கள்.
Subscribe To Our Geethanjali Tamil Devotional Songs Channel:@tamilbhakti
#sabarimalai #ayyappan #ayyappaswamy #bhaktisongs #superhitdevotionalsongs