விடுதலை போராட்ட வீரரும், கம்யூ இயக்க மூத்த தலைவர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய பி இராமமூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று மாலை கும்பகோணத்தில் செஞ்சட்டை பேரணியும் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது இதில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மத்திய குழு உ வாசுகி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்துள்ள உ வாசகி இன்று நண்பகல் கும்பகோணம் சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
பாஜககவுடன் இணக்கமாக காட்டாத, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, கலைத்தோ, கவிழ்த்தோ குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, அதன் வாயிலாக அங்கு தேவையான சட்டத்திருத்தங்களை எளிதாக செய்ய கதவு திறப்பதற்கான தீர்பாக ஜம்மு காஷ்மீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மத்திய குழு உ வாசுகி அச்சம் தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், பாஜகவுடன் இணைக்கமாக இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் கருவியாக ஆளுநர்கள் உள்ளனர் என்றும் பரபரப்பு குற்றம்சாட்டினார்