உங்கள் பிள்ளை புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறும்போது, அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக வேலை செய்யாமல் இருக்கலாம். காய்ச்சல் என்பது சாத்தியமான தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். உங்கள் பிள்ளையின் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது மற்றும் அவருக்குக் காய்ச்சல் இருக்கும்போது என்ன செய்வது என்பதை இந்த வீடியோ எடுத்துக் காட்டுகிறது.
இந்தத் தொடரில் உள்ள ஏனைய வீடியோக்களைப் பார்க்க எங்கள் பிளேலிஸ்ட்டைப் (playlist) பார்வையிடவும்: • புற்றுநோய்ப் பராமரிப்புக் கல்வி | Can...
பிள்ளைகளுக்கான மேலதிகச் சுகாதாரத் தகவல்களுக்கு www.aboutkidshealth.ca/ ஐப் பார்வையிடவும்.
இந்த அறிவுறுத்தல்கள் The Hospital for Sick Children இல் உள்ள நோயாளிகளின் குடும்பங்களுக்கான கற்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். விரிவான செய்முறைப் பயிற்சிக்கு மேலதிகமாக அவை வழங்கப்படுகின்றன. உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு சுகாதாரப் பராமரிப்பு வழங்குனரின் பயிற்சி மற்றும் ஆலோசனையின்றி இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பிள்ளையின் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குனருடன் இந்த வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும், அவை உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றதா எனச் சரிபார்க்கவும்.
Facebook: www.facebook.com/aboutkidshealth
Twitter: www.twitter.com/aboutkidshealth
Pinterest: www.pinterest.com/aboutkidshealth